This Article is From May 07, 2020

கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் தேவையின்றி அச்சப்பட வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் தேவையின்றி அச்சப்பட வேண்டாம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது.

கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் தேவையின்றி அச்சப்பட வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் தேவையின்றி அச்சப்பட வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்திருக்கிறது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

நேற்று பாதிக்கப்பட்ட 771 பேரில் 575 பேர் ஆண்கள், 196 பேர் பெண்கள் ஆவர். ஒட்டுமொத்த அளவில் 3,320 ஆண்கள், 1,507 பெண்கள்,2 திருநங்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நேற்று மட்டும்,  13,413 மாதிரிகளை சேர்த்து மொத்தம் தமிழகத்தில் 1,88,241 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக 16 தனியார் ஆய்வகங்கள், 36 அரசு ஆய்வகங்கள் என மொத்தம் 52 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது, கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் தேவையின்றி அச்சப்பட வேண்டாம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது

இந்த இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இதற்காக, முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் உள்ளிட்டோரை ஒவ்வொரு குடும்பமும், தனி கவனம் எடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும். 

சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். அதற்காக தான் மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். தற்போது நோய் கட்டுபாட்டு பகுதிகளை முழுவதும் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளோம். அந்த பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு மொபைல் ஏடிஎம் வசிதகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு தேவையான தினசரி மருந்துகளை விநியோகிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.   

புதிய புதிய யூகங்களை வகுத்து பொதுமக்களுக்கு எந்த சிரமும் இல்லாமல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், தமிழக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

.