This Article is From Aug 08, 2018

கலைஞருக்கு வெண்கலச்சிலை, பல்கலைக்கழக இருக்கை - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுவை பல்கலைக்கழகத்தில் கலைஞரின் பெயரில் இருக்கை ஒன்றும் அமைக்கவும், புதுச்சேரி அரசு முடிவு

கலைஞருக்கு வெண்கலச்சிலை, பல்கலைக்கழக இருக்கை - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

தி.மு.க தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ராஜாஜி அரங்கத்துக்கு வந்தார். அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர் புதுச்சேரியில் 7 நாள் துக்க அனுசரிக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர் “ கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும். காரைக்காலில் அமையவுள்ள புதிய மேற்கு வழிச்சாலைக்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் வைக்கப்படும். புதுவை பல்கலைக்கழகத்தில் கலைஞரின் பெயரில் இருக்கை ஒன்றும் அமைக்கவும், புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

முன்னதாக புதுச்சேரி சட்டமன்றத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

.