புதுச்சேரி (பிடிஐ) தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புனே காவல் துறை நேற்று முன் தினம் 5 பிரபலமான செயற்பாட்டளர்களை கைது செய்தது. இது இந்திய அளவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி, செயற்பாட்டாளர்களின் கைது முற்போக்கு எழுத்தாளர்களை கொச்சைப்படுத்தும் செயல் என்று தெரிவித்தார். மேலும், பாஜக ஆட்சியில், கருத்து சுதந்தரம் பறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறிவிக்கப்படாத அவசர நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நாரயணசாமி விமர்சனம் செய்தார். இன்று, பண மதிப்பிழப்பு தொடர்பான அறிக்கையை 2 ஆண்டுகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. பண மதிப்பிழப்பால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டன. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விலைவாசி உயர்ந்துள்ளது என்றார்.
ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி முதல், கேரளாவில் பெய்த கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)