Onion price rise - நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில், கிலோவுக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்கிறது. அதை கேலி செய்யும் விதத்தில் இந்த ஏற்பாடு எனத் தெரிகிறது.
Onion price rise - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 73வது பிறந்தநாளை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேக் வெட்டி தொண்டர்களுடன் கொண்டாடினார்.
கொண்டாட்டத்துக்குப் பின்னர் அவர், தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு வெங்காயத்தைப் பரிசாக கொடுத்து மகிழ்ந்துள்ளார். நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில், கிலோவுக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்கிறது. அதை கேலி செய்யும் விதத்தில் இந்த ஏற்பாடு எனத் தெரிகிறது.
புதுச்சேரி முதல்வரின் இந்த செயல், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக வெங்காய விலை உயர்வு பற்றி, நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வியெழுப்பியபோது, “நான் அதிகம் வெங்காயம், பூண்டு சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவர். எனக்கு அதன் நிலை குறித்து பெரிதாக தெரியாது,” என்றார். அதற்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம், “நிதி அமைச்சர் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றால் என்ன அவகோடா பழம்தான் சாப்பிடுவாரா?,” என கேலிக் கேள்வியெழுப்பினார்.
ராகுல் காந்தியும், “நிதி அமைச்சரிடம் அவர் என்ன சாப்பிடுகிறார் என்று யாரும் கேட்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் பற்றித்தான் கேட்கப்பட்டது,” என்றார்.