Read in English
This Article is From Jun 04, 2019

புதுச்சேரி அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்

ஜூன் 7ம் தேதி நடைபெறும் புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்று அறிவித்து விட்டது.

Advertisement
தமிழ்நாடு Translated By

புதுச்சேரி முதலமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் கொடுத்துள்ளது.

Puducherry:

ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை, ஜூன் 7ம் தேதி நடைபெறும் புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக அதிகார மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் துணை நிலைஆளுநரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில் “அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளின் படி தான் யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநரால் செயல்பட முடியுமே தவிர அவருக்கென பிரத்யேகமான சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை”என்று தீர்ப்பு அளித்தது. 

இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவரின் வழக்கினை அவசர வழக்காக கருதி எடுக்க முடியாது என்று அறிவித்து விட்டனர். இன்று உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்த வழக்கில்  ஜூன் 7ம் தேதி நடைபெறும் புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்று அறிவித்து விட்டது.  இந்த வழக்கில் எதிர்மனுதாரராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சேர்க்கவும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement
Advertisement