Puducherry: இயற்கையை பாதுகாக்கும் வகையில் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதுச்சேரி அரசு தடை விதிக்க உள்ளது.
இந்த புதியத் தடை உத்தரவை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த ஞாயற்றுக் கிழமையன்று அறிவித்தார். மேலும் இந்தத் தடை உத்தரவு குறித்து பேசிய அவர், ‘இனி வரும் தலைமுறைக்கு நெகிழிகள் இல்லாத புதுச்சேரியை நாம் தர வேண்டும். இந்தத் தடை மூலம் சுற்றுச்சூழலை நம்மால் பெரிதளவில் பாதுகாக்க முடியும்' என அவர் கூறினார்.
தமிழகத்தில் கடந்த 2018 ஆண்டு ஜூன் மாதம் முதலே பிளாஸ்டிக் தடை பல்வேறு மாவட்டங்களில் விதிக்கப்பட்ட நிலையில், 2019 ஆம் அண்டின் தொடக்கமான ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழக அளவில் இந்தத் தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தது.