IAF Air Strikes: புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
Indian Air Force Strikes LOC: புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
விதிமுறைகளை இந்திய விமானப்படை மீறியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று காலை முதல் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் தரமான சம்பவத்தை இந்திய ராணுவம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 12 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.
மேலும் படிக்க - "புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி: இந்திய விமானப்படை அதிரடி!"
சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல் 100 சதவீதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதீ செய்யப்பட்டுள்ளது. கடந்த 14-ம்தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
உ உரியல் இந்திய ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க - "புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் அடையாளம் கண்டுபிடிப்பு!"