2019 பிப்ரவரி 14-ம்தேதி புல்வாமாவில் நடந்த தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர்.
ஹைலைட்ஸ்
- 2019 பிப்ரவரி 14-ம்தேதி புல்வாமா தாக்குதல் நடந்தது
- தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்
- இன்ஷா, தாரிக் என்ற 2 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்
Srinagar: புல்வாமா தீவிரவாத தாக்குதல் தொடர்பாகத் தந்தை, மகள் இருவரைத் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. 40 பேரைப் பலிகொண்ட இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இருவரும் உதவி செய்துள்ளனர் என்று என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பீர் தாரிக் என்பவர் தந்தை. அவரது மகளின் பெயர் இன்ஷா. இருவரும் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
2019 பிப்ரவரி மாதம் 14-ம்தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் துணை ராணுவத்தினர் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இதில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தார்கள்.
இந்த தாக்குதலை ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த அதில் அகமது தார் என்பவர் நடத்தியதாக என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் நடந்த பின்னர் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தாக்குதலை நடத்திய அகமது தாரின் வீடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அகமது தாருக்கு புல்வாமாவில்தான் சொந்த வீடு உள்ளது.
சுமார் ஓராண்டுக்குப் பின்னர் இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.