Read in English
This Article is From Mar 08, 2019

''தீவிரவாத குழுக்கள் செயல்பட அனுமதிக்க மாட்டோம்'' - பாக். பிரதமர் இம்ரான் கான் உறுதி

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபடத் தொடங்கியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்ததை தொடர்ந்து இம்ரான் கான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Islamabad :

பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாத குழுக்கள் செயல்பட அனுமதி அளிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். தெற்கு பாகிஸ்தான் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான்கான் இவ்வாறு பேசினார். 

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இந்தியா மேற்கொண்ட ராஜ தந்திர நடவடிக்கை மூலமாக சீனா கூட அந்நாட்டை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் 120-க்கு அதிகமான தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. 

இதற்கு முன்பாக இதே அறிக்கையை பாகிஸ்தான் பலமுறை கூறியிருந்தது. கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர் தங்கள் மண்ணில் தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பலமுறை கூறி விட்டது. 

Advertisement

புல்வாமா தாக்குததை தொடர்ந்து இந்தியா அளித்த நெருக்கடியால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement