நேற்று புல்வாமா டவுனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரரை, தீவிரவாதிகள் கையெறிக் குண்டு மூலம் தாக்கினர்.
Srinagar: ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இதில், லஷ்கர்-இ-தய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
புல்வாமாவின் லஸிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படைக்கு இன்று காலை துப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர் ராணுவத்தினர். அப்போது தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் 4 துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று புல்வாமா டவுனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரரை, தீவிரவாதிகள் கையெறிக் குண்டு மூலம் தாக்கினர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படை வீரருக்கு காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இன்றைய என்கவுன்ட்டர் நடந்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலை அடுத்து, ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
(பிடிஐ தகவல்களுடன்)