புல்வாமா தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதி அதில் அகமத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
Srinagar/New Delhi: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அதில் அகமது என்பவர், ஸ்கார்பியோ காரில் 350 கிலோ எடைகொண்ட வெடி பொருட்களை நிரப்பியுள்ளார். பின்னர் ரிசர்ப் போலீசார் சென்ற பஸ் மீது வேகமாக மோதி பஸ்ஸை வெடிக்கச் செய்துள்ளார்.
அந்த பேருந்துக்குள் சுமார் 40 ரிசர்வ் போலீசார் இருந்தனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பலி எண்ணிக்கை முதலில் 8-ஆக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது 18 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
2016-ல் உரியில் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 19 பேர் உயிரிழந்தனர். அப்போதே அதில் தீவிரவாத இயக்கத்தில் இருந்துள்ளான். கையில் ரைபிளுடன் நிற்கும் அவனது புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய தலைவர்கள் பெரும்பாலானோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முகமது உஸ்மான் என்கிற முக்கியப்புள்ளி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜெய்ஷ் இ முகமதுவின் தலைவர் மசூத் அசார் ஆவார். அவரது உறவினர்தான் இந்த முகமது உஸ்மான்.
கடந்த 2017-ல், ஜெய்ஷ்-ன் செயல் தலைவர் காலித் பாரமுல்லாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும் படிக்க - ‘'காஷ்மீர் தாக்குதலின் கொடூரத்தை வார்த்தையில் சொல்ல முடியாது''