हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 26, 2019

90 செகண்ட் ஆப்பரேஷன்! 300 தீவிரவாதிகள் காலி!! – இறங்கி அடித்த இந்திய விமானப்படை

விமானப்படைக்கு சொந்தமான 12 மிராஜ் 2000-ரக போர் விமானங்கள் இன்று அதிகாலை 3.30-க்கு தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. 1,000 கிலோ எடை வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.

Advertisement
இந்தியா Edited by

லேசர் உதவியுடன் மிகத் துல்லியமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.

New Delhi:

90 செகன்ட் மட்டுமே இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ‘'வரவிருக்கும் தீவிரவாத தாக்குதலை தவிர்ப்பதற்கான அட்டாக்'' என்று இந்தியா தரப்பில் இந்த தாக்குதலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விமானப்படை அழித்த தீவிரவாத முகாம்களை இந்தியா தேடி வரும் மசூத் அசாருடைய மைத்துனர்தான் நிர்வகித்து வந்துள்ளார். புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினரை இழந்ததற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தொடர்பான 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

------

  1. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்குள் 80 கிலோ மீட்டர் உள்ளே சென்று பாலகோட் என்ற இடத்தில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
  2. மிராஜ் 2000- ரகத்தை சேர்ந்த 12 விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. மிகச் சரியாக அதிகாலை 3.30-க்கு லேசர் தொழில்நுட்ப உதவியோடு துல்லியமாக 1,000 கிலோ வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.
  3. பாலகோட்டின் 6 இடங்களில் தாக்குதல் நடந்துள்ளது. இவற்றில் ஒரு இடம் மலை உச்சியில் அடர்ந்த வனத்திற்குள் அமைந்திருக்கிறது.
  4. ஒட்டுமொத்த ஆப்பரேஷனும் 90 செகன்ட் (ஒன்றரை நிமிடம்) மட்டுமே நடந்திருக்கிறது.
  5. விமானப்படை அழித்திருப்பது ஜெய்ஷ் இ முகமதுவின் மிகப்பெரும் தீவிரவாத பயிற்சி முகாம். இதனை இந்தியா தேடி வரும் ஜெய்ஷ் இ முகதுவின் தலைவர் மசூத் அசாருடைய மைத்துனர் நிர்வகித்து வந்தார்.
  6. உளவுத்துறை அளித்த தகவலின்படி, பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
  7. மேலும் பல தற்கொலைப்படை தாக்குதலை நடத்துவதற்காக தீவிரவாதிகளுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பயிற்சி அளித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  8. பேராபத்தை தவிர்ப்பதற்காக இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று வெளியுறவு செயலர் விஜய் கோகலே கூறியுள்ளார்.
  9. அதிக எண்ணிக்கையில் ஜெய்ஷ் இ முகமதுவின் தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், சீனியர் கமாண்டர்கள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
  10. மொத்தம் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 1971-க்கு பிறகு விமானப்படை போர் விமானங்கள் எல்லைதாண்டி சென்று தாக்குதல் நடத்தியிருக்கிறது.
Advertisement