This Article is From Feb 26, 2019

‘’பாதுகாப்பான கையில் நாடு உள்ளது’’ - விமானப்படை தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கருத்து

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை இன்று தாக்குதல் நடத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று இந்திய விமானப்படை இன்று காலை அதிரடி தாக்குதலை நடத்தியது.

Churu:

ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ‘'பாதுகாப்பான கையில் நாடு உள்ளது'' என்று குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது-

இந்த நாட்டை தலை குனியவோ, வீழ்ச்சியை நோக்கிக் செல்லவோ விடமாட்டேன் என்று நான் உறுதிமொழி அளிக்கிறேன். முப்படைகளுக்கும் சல்யூட் அடித்து நான் தலை வணங்குகிறேன். பாதுகாப்பான கையில் நாடு உள்ளது.

உங்களது ஆதரவு, என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகத்தான் நான் இன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மக்கள் அரசாகிய நாம் எந்தவொரு தனிப்பட்ட நபரை விடவும், தனிப்பட்ட குழுக்களை விடவும் வலிமை மிக்கவர்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். முன்னாள் ராணுவத்தினர் மத்தியில் மோடியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை இன்று தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தை கூட்டி பேசினார். இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மேலும் படிக்க90 செகண்ட் ஆப்பரேஷன்! 300 தீவிரவாதிகள் காலி!! – இறங்கி அடித்த இந்திய விமானப்படை

.