This Article is From Feb 18, 2019

12 மணி நேர எண்கவுண்டர்! - புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரான்.

12 மணி நேர எண்கவுண்டரை தொடர்ந்து பயங்கரவாதி கம்ரான் சுட்டுக்கொள்ளப்பட்டான்.

ஹைலைட்ஸ்

  • பாதுகாப்பு படையினர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கியப்புள்ளிகளை சுட்டுக்
  • பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
  • அந்த அமைப்பை சேர்ந்த மேலும் ஒருவன் சுட்டுகொள்ளப்பட்டுள்ளான்.
New Delhi/Srinagar:


கடந்த வியாழன் அன்று, ஜம்மூ- காஷ்மீரின் புல்வாமாவில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று பாதுகாப்புப் படைக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மூளையாக செயல்பட்ட தளபதி கம்ரான் சுட்டுக் கொல்லப்பட்டான்.   

கம்ரானைத் தவிர கஷி ரஷித் என்னும் தீவிரவாதியும் கொல்லப்பட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர் இந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சில நாட்களுக்கு முன்னர் புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலுக்கு மிக அருகில்தான் நேற்றிரவு முதல் என்கவுன்ட்டர் நடந்தது. முதலில் ராணுவத் தரப்பில் 4 பேரும், பொது மக்களைச் சேர்ந்த ஒருவரும் பலியாகினர் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜெய்ஷ் அமைப்பின் முக்கியப் புள்ளிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் கம்ரான் என்ற பயங்கரவாதி, ஜெய்ஷ்–இ–முகமது அமைப்பின் மூத்த தளபதியாக இருந்து வந்தான். பாகிஸ்தானை சேர்ந்த இவன் கடந்த 14–ந் தேதி பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அது குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில், அவன் கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சண்டையில் 4 பாதுகாப்பு படை வீரர்களும், ஒரு போலீஸ் அதிகாரியும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 16 மணி நேரமாக நடந்த சண்டை பயங்கரவாதிகள் யாரும் இல்லையென்ற நிலையில் முடிவுக்கு வந்தது. 

இந்த என்கவுன்ட்டரின் முக்கிய நோக்கம், கம்ரான்தான் எனப்படுகிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு கம்ரான்தான் மூளையாக செயல்பட்டவர் என்று நம்பப்படுகிறது. 

கடந்த வியாழக்கிழமை, ஜம்மூ-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவர், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினார். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 

.