This Article is From Feb 22, 2019

‘’அத்து மீறினால் பதிலடி நிச்சயம்’’ – இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய முவுகள் பல எடுக்கப்பட்டன.

‘’அத்து மீறினால் பதிலடி நிச்சயம்’’ – இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பாதுகாப்பு குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • பாகிஸ்தான் பாதுகாப்பு கூட்டம் இம்ரான் கான் தலைமையில் நடந்தது
  • ராணுவ தலைமை தளபதியுடன் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார்
  • இந்தியா தாக்கினால் பதிலடி நிச்சயம் என்கிறது பாகிஸ்தான்
Islamabad:

புல்வாமா தாக்குதலை மனதில் கொண்டு பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி நிச்சயம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை செய்துள்ளது.

புல்வாமாவில் கடந்த 14-ம்தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இதற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ முக்கிய காரணம் என்று மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கு ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தக் கூடாது என்பதுதான் பாகிஸ்தானின் பதிலாக இருக்கிறது. இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது. இதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

பாகிஸ்தானையும், அதன் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் ராணுவம் உறுதியாக உள்ளது. இது புதிய பாகிஸ்தான். எங்கள் ராணுவத்திற்கு நாட்டை பாதுகாப்பதற்கான அனைத்து வலிமையும் உண்டு.

புல்வாமா தாக்குதல் என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். அது உள்நாட்டு சதியால் ஏற்படுத்தப்பட்டது. இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அதற்கு பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடியை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்பாக பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் கமர் ஜாவித் பாஜ்வாவும், இம்ரான் கானும் ஆலோசனை நடத்தியிருந்தனர்.

.