சாவித்ரி புனே பல்கலைக் கழக மாணவர்கள் 20 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகம் செய்தனர்.
Pune: கின்னஸ் சாதனை முயற்சியாக ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன. உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
புனேவின் சாவித்ரி புலே பல்கலைக் கழக மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
பல்கலைக் கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அப்போது மூவர்ண கொடி வண்ணத்தில் மாணவர்கள் சட்டைகள் மற்றும் தொப்பிகளை அணிந்திருந்தனர்.
காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் மையக் கருத்தாக அமைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினம் குறித்து பேசியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, வருங்காலம் சிறப்பாக அமைவதற்கு அதிக மரக்கன்றுகளை நட்டு இப்போதே வளர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதேபோன்று 'மரக்கன்றுடன் செல்ஃபி' என்ற பிரசாரத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. மக்கள் மரக்கன்றுகளை நட்டு #Selfiewithsapling என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைதளங்களில் படங்களை பதிவு செய்யுமாறு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.