4 நாட்களாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
Sangrur, Punjab: பஞ்சாபில் 150 அடி ஆழ ஆள்துளை பம்புக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்தது. அவரை மீட்கும் பணி 92 மணி நேரமாக நடந்து வருகிறது. அவர் உயிருடன் மீட்கப்படுவது என்பது சந்தேகம்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் பகவான்புரா கிராமத்தில் பதேவீர் என்ற 2 வயது குழந்தை கடந்த வியாழன் அன்று விளையாடிக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் குழந்தையை காணததான் அதன் பெற்றோர் தேடத் தொடங்கினர்.
இறுதியில் குழந்தை பதேவீர் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை போருக்குள் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. இருப்பினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டது.
குழந்தைக்கு தண்ணீர், உணவு ஏதும் அளிக்கப்படாத நிலையில் அவருக்கு ஆக்ஸிஜன் மட்டும் செலுத்தப்பட்டு வருவதாக மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படை, உள்ளூர் அதிகாரிகள், கிராம மக்கள் என ஏராளமானோர் குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.
கடந்த 92 மணி நேரமாக மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றனர். மற்றொரு பக்கமாக பக்கவாட்டில் ஆழம் அமைத்து குழந்தையை மீட்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் குழந்தை பத்திரமாக மீட்கப்படுவதற்கு கிராம மக்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
மார்ச் மாதத்தின்போது அரியானாவை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று 2 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் ஆழ்துளை குழாயில் இருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.