Read in English
This Article is From Jul 16, 2019

பஞ்சாப் அமைச்சர் சித்துவின் ராஜினாமா ஏற்கப்படுமா? நாளை முடிவை அறிவிக்கிறார் முதல்வர்!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் 8 இடங்களிலே வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, சித்து தனது உள்ளாட்சி துறையை மோசமாக கையாண்டதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி நகரப்புறங்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியிருந்தார்.

Advertisement
இந்தியா Edited by

முதல்வருடன் இருந்த கருத்து வேறுபாடே சித்துவின் ராஜினாமாவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

New Delhi:

பஞ்சாப் மாநில சுற்றுலா, கலாசாரம், உள்ளாட்சித்துறைகளின் அமைச்சர் நவ்ஜேழத் சிங் சித்து ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில் அதனை ஏற்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்சிங் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் 8 இடங்களிலே வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, சித்து தனது உள்ளாட்சி துறையை மோசமாக கையாண்டதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி நகரப்புறங்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியிருந்தார். 

Advertisement

இதையடுத்து, தனக்கு தரப்பட்ட புதிய அமைச்சர் பதவியை விரும்பாத சித்து, நீண்ட நாட்களாக பதவி ஏற்காமலே இருந்து வந்தார். தொடர்ந்து, அமைச்சரவை கூட்டங்களையும் அவர் தவிர்த்து வந்தார். இதைத்தொடர்ந்தே, கடந்த மாதம் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

முன்னதாக, மாநிலங்களவை தேர்தல் நடந்து முடிந்த பின்பு கடந்த ஜூன் 6ஆம் தேதி இந்த புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியானது. பஞ்சாப் முதல்வர் அமிரிந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில், உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நவ்ஜோத் சித்துவுக்கு மின்சாரத்துறை மாற்றம் செய்யப்பட்டது.

Advertisement

மேலும், அவர் கைவசம் இருந்த சுற்றுலாத்துறை இலாக்காவும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த 10-ம்தேதி சித்து ராஜினாமா செய்தார். இது பஞ்சாப் அரசியலிலும் காங்கிரஸ் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இந்த நிலையில் சித்து விவகாரத்தில் நாளை முடிவு எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement