பெண்ணை வீட்டிலிருந்து இழுத்து வந்து ரோட்டில் போட்டு பெல்ட் மற்றும் குச்சிகளை கொண்டு அடித்தனர்.
Muktsar: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்தார் என்பவரின் அண்ணன் பெண்ணொருவர் பண மோசடி செய்ததாக கூறி அந்தப் பெண்ணை அடித்துள்ளார்.
முக்தார் நகராட்சியின் கவுன்சிலர் ராகேஷ் செளத்ரியின் சகோதரும் அவரது உதவியாளர்களும் பெண்ணை வீட்டிலிருந்து இழுத்து வந்து ரோட்டில் போட்டு பெல்ட் மற்றும் குச்சிகளை கொண்டு அடித்தனர்.
அந்தப் பெண்ணை அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. வீடியோவில் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வருபவர்களையும் அடித்து விரட்டுகின்றனர். அடிபட்ட பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இந்த செயலை செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெறச் செய்வோம் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்