Shiromani Akali Dal chief Sukhbir Singh Badal says law and order has broken down in Punjab
Chandigarh: பஞ்சாப் மாநிலம் சான்கர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பள்ளி வாகன நடத்துநர் 4 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அந்த இடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவம் பள்ளிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தூண்டியுள்ளது.
பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக அவரது தாயார் பள்ளிக்கு வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடந்து முடிந்தபின் ஏதுமறியாமல் அம்மா தன் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார்.
சனிக்கிழமை மாலை சிறுமி அடிவயிற்றில் வலி என்று கூறி அழுதிருக்கிறாள், ஞாயிற்றுக் கிழமையும் வலியால் துடிக்கவும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இந்த செய்தி பரவியதால், தூரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன. உடனடியாக குற்றவாளியை கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஞாயிறு அன்று குற்றவாளி கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் “குற்றவாளயை உடனடியாக கைது செய்ய வேண்டும் . பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்” அதன்படியே செயல்படுவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.