This Article is From Jun 18, 2020

ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ஜெகநாதரே எங்களை மன்னிக்க மாட்டார்: உச்சநீதிமன்றம்

Lord Jagannath rath yatra: தொற்றுநோய் பரவல் சமயத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடைபெற முடியாது" என்று உச்சநீதிமன்றம் கூறியது.

ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ஜெகநாதரே எங்களை மன்னிக்க மாட்டார்: உச்சநீதிமன்றம்

Puri rath yatra: ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ஜெகநாதரே எங்களை மன்னிக்க மாட்டார்: உச்சநீதிமன்றம்

ஹைலைட்ஸ்

  • ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ஜெகநாதரே எங்களை மண்ணிக்க மாட்டார்
  • பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையை தள்ளிவைக்குமாறு வழக்கு
  • தொற்றுநோய் பரவல் சமயத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடைபெற முடியாது"
New Delhi:

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை மற்றும் அதனுடன் தொடர்புடைய விழாக்களுக்கு இந்த ஆண்டு அனுமதி கிடையாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

ஜூன் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையை தள்ளிவைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நாங்கள் ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால், பகவான் ஜெகநாதரே எங்களை மன்னிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார். 

தொற்றுநோய் பரவல் சமயத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடைபெற முடியாது" என்று உச்சநீதிமன்றம் கூறியது, மேலும், சுகாதார வல்லுநர்கள் ஆலோசனையை மேற்கோள் காட்டி, மோசமான தொற்றுநோயான கொரோனா வைரஸ் சுவாச நீர்த்துளிகள், தொடர்பு வழியாக பரவக்கூடும் என்பதால் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். நெரிசலான சூழலில் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும்.

இதன் காரணமாக பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பிற்காக இந்த ஆண்டு ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்த, ஒடிசா விகாஸ் பரிஷத், தனது மனுவில், ஒடிசாவின் கடலோர மாவட்டத்தில் வருடம்தோறும் நடைபெறும் ரத யாத்திரையில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்றும், இந்த மத நிகழ்வு 10 முதல் 12 நாட்கள் வரை நடைபெறும் என்றும் கூறினார்.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த ரத யாத்திரை நடைபெற்றால், "லட்சக்கணக்கான பக்தர்களை பாதிப்பதற்கான அழைப்பாக இருக்கும்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது, ஜூன் 30க்கு முன்பு மத வழிபாட்டு தலங்களை திறக்க ஒடிசா அரசும் அனுமதிக்கவில்லை. அதனால், இந்த ரத யாத்திரையை அனுமதிப்பது மாநில அரசின் உத்தரவை மீறும் செயல் என்று தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்து, "10,000 பேர் மட்டுமே ரத யாத்திரையில் கலந்துகொண்டாலும், அதுவும் ஒரு தீவிரமான விஷயம் "என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

.