This Article is From Dec 25, 2018

விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுவதுதான் காங்கிரசின் கலாசாரம் - தமிழிசை குற்றச்சாட்டு

விவசாயிகளின் தரத்தை உயர்த்துவதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழிசை கூறியுள்ளார்.

Advertisement
Tamil Nadu Posted by

விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுவதுதான் காங்கிரசின் கலாசாரம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது-

கடனை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறி காங்கிரஸ் கட்சி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுதான் எங்களின் திட்டம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஆன்லைன் மார்க்கெட்டிங், விவசாயிகளின் பயிர்களுக்கு ஆதார விலை அளிப்பது போன்ற திட்டங்களை பாஜக அரசு செய்து வருகிறது.

மத்திய பிரதேசத்தில் கடனை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் சொன்ன பிறகு 2 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரைக்கும் 55 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

Advertisement

காங்கிரஸ் ஆட்சியில் அதிக விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். சுய லாபத்திற்காக விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விட்டோம் என்று காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறது. விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுவதுதான் காங்கிரசின் கலாசாரம்.

தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் - திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள். வாக்குச்சாவடி மாநாடுகளை நாங்கள் நடத்தப்போகிறோம். பாஜகவின் நல்லாட்சியைப் பற்றி மக்களிடம் சொல்லவிருக்கிறோம்.

Advertisement

இவ்வாறு அவர் கூறினார்.
 

Advertisement