மலைப்பாம்பு, நாயரின் பிடியிலிருந்து நழுவி அவரின் கழுத்தை இறுக்கத் தொடங்கியது.
கேரளாவில் 61 வயதான நபரின் கழுத்தை 10 அடி மலைப்பாம்பு இறுக்கியது. இந்து நாளிதழின் படி செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் 61 வயதான புவனாச்சந்திரன் நாயர் மலைப்பாம்பினை கண்டுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யர் அணைக்கு அருகே இருந்த புதரில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பினை தூக்கி சாக்கில் வைத்து கட்ட முயன்றனர்.
மலைப்பாம்பு, நாயரின் பிடியிலிருந்து நழுவி அவரின் கழுத்தை இறுக்கத் தொடங்கியது. செய்தி நிறுவனம ஏ.என்.ஐயினால் பகிரப்பட்ட வீடியோவில் மலைப்பாம்பு அவரது கழுத்தை இறுக்கும் நிமிடங்கள் பதிவாகியுள்ளது.
நல்வாய்ப்பாக, சம்பவ இடத்தில் இருந்த மற்ற தொழிலாளர்கள் மலைப்பாம்பை பிடித்தனர். அவரது கழுத்தில் இருந்து பாம்பை விலக்க முயற்சிப்பதையும் வீடியோவில் பார்க்கலாம். நாயரை பாம்பின் பிடியிலிருந்து விலக்க பல நொடிகள் ஆனது.
நாயர் சிறிய காயங்களுடன் தப்பித்தார்.
இந்நிகழ்வுக்கு பின் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கண்காணிப்பில் வைத்து பின்னர் காட்டில் விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Click for more
trending news