This Article is From May 02, 2020

முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு! தைரியம் இருந்தால் மட்டுமே பாருங்கள்!!

கடந்த ஆண்டு, குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒன்பது அடி நீளமுள்ள மலைப்பாம்பு வழிதவறி வந்திருந்தது. பின்னர் அங்கு ஒரு பூனையை விழுங்கி அதை வாந்தியெடுத்திருந்தது

முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு! தைரியம் இருந்தால் மட்டுமே பாருங்கள்!!

இந்த வைரல் வீடியோவில் ஒரு பர்மிய மலைப்பாம்பு ஒரு மானை விழுங்குகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரபரப்பில் உள்ள நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள துத்வா தேசிய பூங்காவில் பர்மிய மலைப்பாம்பு ஒன்று மான் ஒன்றை முழுமையாக விழுங்கும் காட்சி படமாக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது மீண்டும் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய வன சேவை அதிகாரி பர்வீன் கஸ்வான் டிவிட்டரில் இந்த வீடியோவினை பகிர்ந்துள்ளார்.

பர்மிய மலைப்பாம்புகள் இனமானது அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஐந்து பாம்பு இனங்களில் ஒன்றாகும். இவ்வகை பாம்புகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் இதை அதிகம் காணமுடியும். பொதுவாக மலைப்பாம்புகளுக்கு நஞ்சு பைகள் இல்லாததால் அவை இரையை இறுக்கமாகச் சுருட்டி, மூச்சு முட்டச்செய்து, கொல்லும். பின்பு தன்னுடைய நீண்ட தசைநார்கள் கொண்ட வாயைப் பயன்படுத்தி இரையை விழுங்கும்.

இந்த வீடியோவில், பூங்காவில் உள்ள இந்த மலைப்பாம்பு புள்ளி மான் ஒன்றினை இறுக்கி வைத்துள்ளதைக் காண முடிகிறது. “இந்த பாம்பு ஒரு புள்ளி மானை விழுங்கத்தொடங்கியிருந்தது. நாங்கள் சரியான இடத்திலிருந்து சரியான நேரத்தில் படமாக்கினோம்.“ என வீடியோவை யூடியூபில்  வெளியிட்டு கஸ்வான் கூறியுள்ளார். ட்விட்ரில் நம்பமுடியாதது எனக் குறிப்பிட்டு கஸ்வான் பகிர்ந்துள்ளார்.

மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவானது 21,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்த பயனாளர்கள் தங்களுடைய கேள்விகளையும், கருத்துகளையும் முன்வைத்துள்ளனர்..

இந்த வீடியோவினை கடந்த ஆண்டு வைல்ட்லென்ஸ் படமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எழுந்த பல கேள்விகளுக்கு வைல்ட்லென்ஸ் பதிலளித்திருந்தது. மலைப்பாம்புகள் கொம்புகளைக் கூட ஜீரணிக்கக் கூடியவை என்றும் பெரும்பாலும் மான்களை இரையாக்குகின்றன என்றும் வைல்ட்லென்ஸ் குழு கேள்விகளுக்கு விடையளித்திருந்தது.

கடந்த ஆண்டு, குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒன்பது அடி நீளமுள்ள மலைப்பாம்பு வழிதவறி வந்திருந்தது. பின்னர் அங்கு ஒரு பூனையை விழுங்கி அதை வாந்தியெடுத்திருந்தது

Click for more trending news


.