This Article is From Feb 26, 2019

விமானத்தில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் சென்ற பாம்பு!

சுமார் 14,000 கிலோமீட்டர் வரை பயணித்த பாம்பு!

விமானத்தில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் சென்ற பாம்பு!

சுமார் 14,000 கிலோமீட்டர் வரை பயணித்த பாம்பு!

ஆஸ்திரேலியாவில் தனது விடுமுறையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய ஸ்காட்டிஷ் பெண்மணி ஒருவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. 

மரியா பாக்ஸால் என்னும் அந்த பெண் தனது பெட்டிகளை திறந்தபோது அதில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ந்துபோனார். விஷமற்ற அந்த பாம்பானது, அப்பெண்னின் பெட்டியில் சுமார் 14,000 கிலோமீட்டர் பயணித்துள்ளது. 
 

uuh809o

முதலில் இது தன்னை யாரோ ஒருவர் ஏமாற்றுவதற்காக ரப்பர் பாம்பை வைத்ததாக நினைத்த அவர்,  அதை தொட்டவுடன்  அசைந்ததை கண்டு திடுக்கிட்டார். 

செருப்பு பெட்டிக்குள் பதுங்கிக்கிடந்த பாம்பு, உடனடியாக வனத்துறை அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறும்போது, 'பாம்பை கண்டவுடன் வந்த போனுக்கு பின்னர் நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம், பின்னர் அந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது'  என்றனர். 

மீட்கப்பட்ட அந்த பாம்பு தற்போது ஈடன்பர்கில் உள்ள விலங்கு பாதுகாப்பு மையத்தில் இருக்கிறது. விமானங்களுக்குள் பாம்புகள் வருவது இது ஓன்றும் முதல் முறையில்லை;  கடந்த ஆண்டு ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவுக்கு 20 உயிருள்ள பாம்புகளை தனிநபர் ஒருவர் தனது கைப்பையில் எடுத்துச் சென்றிருந்தார். இந்த செய்திகள் இணைய தளத்தில் வைரலாகி இருந்தது.

 

Click for more trending news


.