பிரஸுக்கு பதிலாக வேப்பங்குச்சியை பயன்படுத்துங்கள். (file photo)
New Delhi: பாஜக எம்.பியான மீனாட்சி லேகி பழமையான இந்திய வாழ்வியல் முறைப்படியே வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். பிளாஸ்டிக் பயன்பாட்டுகளை குறைத்து கைகளை குவித்து தண்ணீர் குடிக்க வேணடும். பல் விளக்க வேப்பம் குச்சியினை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
எரிசக்தி மாற்றம், மானியங்கள் மற்றும் காற்றின் தர மேலாண்மை குறித்த சந்திப்பில் பேசிய போது இந்தியாவின் பாரம்பரியத்தை விட்டு விலகி பிறரை நகலெடுப்பதன் மூலம் ஆற்றல் மற்றும் வளங்கள் வீணடிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
“நமக்கு எதற்கு கண்ணாடி பாட்டில்கள் கூட தேவை? நாங்கள் பள்ளியில் இருந்தபோது இரண்டு கைகளையும் குவித்துதான் தண்ணீரை குடிப்போம். இது மிகவும் சுகாதாரமான வழி என்று கருதுகிறேன். பிளாஸ்டிக் பாட்டிலை கழுவி தண்ணீரை வீணாக்க வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார். நாட்டில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யப்படுவதற்கு முன் எவ்வாறெல்லாம் தயார் ஆகிக் கொள்ள வேண்டும் என்று இந்த பதிலை கூறியுள்ளார். காய்கறி விற்பனையாளர் வரும் போது நாங்கள் ஒரு கரும்பு கூடையை பயன்படுத்துவோம். பிளாஸ்டிக் இல்லை. பல் விளக்க வேப்பங் குச்சியை பயன்படுத்த தொடங்க வேண்டும். பிளாஸ்டிக் பிரஸ்கள் மண்ணில் மக்காமல் கிடக்கின்றன என்று அவர் கூறினார்
டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் சானிட்டரி பேட்களை பயன்படுத்துவதற்கு பதில் பழைய ஆடைகளை மீண்டும் பயன்படுத்துங்கள் என்று பரிந்துரைத்தார். நாப்கின்கள் மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டபோது பெண்கள் கோபப்பட்டனர். ஆனால் நாங்கள் பாலிமரை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவே அவ்வாறு செய்தோம் என்றார்.
“என் பாட்டி, கொள்ளுபாட்டு காலத்தில் எல்லோரும் துணியை பயன்படுத்தியிருப்பார்கள். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி பிறகு அதை எரித்து விடலாம்.” என்று கூறினார். “இந்த பாலிமர்கள் இவ்வளவு நிலங்களை பாழ் படுத்தியுள்ளன. 18 சதவீத வரிக்க்கு பதிலாக 28 சதவீத வரிகள் இருக்க வேண்டும் என்று கூறினார்.
2022 க்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை அகற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வரும் பிரதமர் மோடி மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி ஒரு சில பொருட்களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது.