This Article is From Jun 26, 2018

உபர் காரில் மும்பை பெண் பத்திரிகையாளருக்கு நிகழ்ந்த இன வெறித் தாக்குதல்!

மும்பையில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் வட இந்தியப் பெண்ணை, உபர் காரில் சக பயணி இன வெறித் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. 

உபர் காரில் மும்பை பெண் பத்திரிகையாளருக்கு நிகழ்ந்த இன வெறித் தாக்குதல்!

ஹைலைட்ஸ்

  • மும்பையில் பட்டப் பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது
  • இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்
  • இந்த சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது
Mumbai: மும்பையில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் வட இந்தியப் பெண்ணை, உபர் காரில் சக பயணி இன வெறித் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. 
 
mumbai journalist hair


இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர், ‘உர்மி எஸ்டேட் அருகில் என்னுடன் பயணித்த அந்தப் பெண் என்னை ‘சின்க்கி’ என்றும் ‘சின்க்கி ஷிட்’ என்றும் திட்டினார். அதற்கு நான், ‘நீங்கள் சொல்வது இனவெறி மிகுந்த சொல்’ என்று சொன்னேன். அதை அவர் மதிக்காமல் தொடர்ந்து தூற்றவும் தாக்கவும் செய்தார். அவரை உடனே ஒரு போட்டோ எடுக்க முயன்றேன். ஆனால், மொபைலை பிடுங்கிவிட்டு, உடைத்து விடுவதாக அச்சம் மூட்டினார். காரில் இருந்து இறங்குவதற்கு முன்னர் அவர் என் தலை முடியின் ஒரு பகுதியை பிடுங்கினார். என் முகத்தைப் பிராண்டினார். யாரென்று தெரியாத நபரால் பட்டப் பகலில் நான் தாக்குதலுக்கு உள்ளானேன். உபர் காரின் பின் சீட்டில் நிறைய இடங்களில் என் முடி சிதறியுள்ளது. உடல் ரீதியாக நான் தாக்குதலுக்கு உள்ளானேன். உளவியல் ரீதியாக நான் அச்சமடைந்துள்ளேன். ஒரு நாளைக்கு இரண்டு முறை நான் உபர் காரில் பயணம் செய்து வருபவள். இனி, என்னால் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை’ என்றவர்,

தொடர்ந்து, ‘என்னைத் தாக்கிய பெண்ணைப் பற்றிய தகவல்களை நான் உபர் நிறுவனத்திடம் கேட்ட போது, ‘வாடிக்கையாளரின் ப்ரைவசி’-யை வெளியில் சொல்ல முடியாது என்று நிராகரித்து விட்டது உபர். போலீஸில் புகார் கொடுத்த பின்னர், அவர்கள் உபர் நிறுவனத்திடம் கேட்ட போதும், அந்தப் பெண்ணின் தகவல்களை தர முடியாது என்று கூறிவிட்டது’ என்று அதிர்ச்சியளிக்கும் தகவலையும் சொன்னார்.
 

mumbai journalist scars

இந்த ட்வீட்டுகளுக்குப் பிறகு உபர் நிறுவனத்தை சமூக வலைதளங்களில் மிகவும் விமர்சித்தனர் நெட்டிசன்கள். இதையடுத்து உபர், ‘எங்கள் காரில் பயணம் செய்த பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது. இது எங்கள் நிறுவனத்தின் கொள்களைகளுக்குப் புறம்பானது. குற்றம் சுமத்தப்பட்டுள்ளப் பெண் எங்கள் செயலியை இனி பயன்படுத்த முடியாது. இந்த விஷயம் குறித்து போலீஸ் நடத்தும் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்புக் கொடுப்போம்’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் உபர், ஓலா உள்ளிட்ட தனியார் டாக்ஸி நிறுவனங்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்கு வழிவகைகளை வகுக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் பணித்தது. இது குறித்து இன்னும் மத்திய அரசு, சரிவர தகவல்களை செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.