அவர் 2015 இல் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றார்.
New Delhi: ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வந்து அதை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசு முடிவு எடுத்து அக்டோபர் 30 நடைமுறைக்கு கொண்டு வந்தது. லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் லெப்டினண்ட் கவர்னராக ராதா கிருஷ்ணா மாத்தூர் உள்ளார். ராதா கிருஷ்ணா மாத்தூர் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்றார். திரிபுரா கேடரில் இருந்து 1977-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தார்.
65 வயதான மாத்தூர் லெப்டினண்ட் கவர்னராக நியமிக்கப்படுவதற்கு முன்பு மையத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்தார். ஐ.ஐ.டி கான்பூர் முன்னாள் மாணவரான மாத்தூர் ஸ்லோவேனியாவின் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான சர்வதேச மையத்திலிருந்து எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.
கடந்த காலத்தில் திரிபுராவின் தலைமை செயலாளராக இருந்தார். 2011-இல் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகத்தின் செயலாளராக செயல்பட்டுள்ளார். அதன்பின் ஒரு ஆண்டு கழித்து பாதுகாப்பு துறை தயாரிப்பு செயலாளரானார். அவர் 2015 இல் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றார்.