நயன்தாராவைப் பற்றி பேசிய ராதாரவிக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. (courtesy Facebook)
ஹைலைட்ஸ்
- ராதா ரவி பெண்கள் குறித்தான சர்ச்சை பேச்சை மீண்டும் மீண்டும் பேசுகிறார்.
- இது முதல் முறையல்ல - விஷால்
- நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் இதே போல்தான் பேசுவார் -விஷால்
Mumbai: தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருக்கும் விஷால் கிருஷ்ணா, பெண்களை அவதூறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாராவைப் பற்றி அவ தூறாக விமர்சித்து பேசியதற்கு பலரும் ராதா ரவியின் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
விஷால், ‘மூத்த நடிகர்கள் பெண்கள் மீது தவறான கருத்துக்களை கூறுவது கண்டித்தக்கது. ராதா ரவி பெண்களைப் பற்றி அவதூறாக பேசுவது முதல் முறையல்ல, ராதாரவி மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இந்த சம்பவம் கடைசி முறையாக இருக்காது' என்று கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் ராதாரவி பேசிய போது, கைதட்டியவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே என்றும் கூறினார்.
‘பெண்ணை கேலி செய்து பேசும் போது ரசித்துக் கொண்டு இருப்பவர்களும் தவறானவர்களே' என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் ராதாரவி “ நயன்தாரா, பேயாகவும் நடிக்கிறாங்க. அந்தப் பக்கம் சீதாவாகவும் நடிக்கிறாங்க. முன்பெல்லாம் சாமி வேஷம் போடறதுன்னா கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவாங்க. ஆனால், இப்பல்லாம் யாரு வேணும்னாலும் போடலாம் சாமி வேஷம். இப்பல்லாம், கும்பிட்றவங்கையும் சாமி வேஷம் போடலாம். கூப்பிட்றவங்களையும் சாமி வேஷம் போடலாம். அப்டியாகிடுச்சு சினிமா” என்று பேசினார்.
இந்த பேச்சு குறித்து வெளியே தெரிந்தவுடன் பலர் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பைப் பதிவிட்டனர். ராதாரவியின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்ததோடு அவரை அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளார்.
சமீபத்தில் தென்னிந்தியாவில் சர்ச்சைக்குரிய நடிகையான ஷகீலாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கவுள்ள படத்தில் வேலை பார்த்த ரிச்சா சாதா, திமுக தலைவர் ஸ்டாலினின் நடவடிக்கையை வெகுவாக பாராட்டியுள்ளார்.
பெண்களைப் பற்றிய அவமரியாதை கருத்துகளை தெரிவிக்கும் எவரையும் மன்னிக்க முடியாது. நவீன சமூகத்தில் பெண்கள் குறித்த பாலியல் மற்றும் தவறான கருத்துகளுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் நடிகையான குஷ்பு “ராதா ரவியின் கருத்துகள் அதிர்ச்சியளிக்கிறது. அவருடைய வார்த்தைகள் நடிகையின் கேரக்டரை அழித்து விட்டது என்று கூறியுள்ளார்."
நடிகை சமந்தா, "ராதா ரவி உங்களைப் பார்க்க பாவமாக உள்ளது. உங்கள் மனம் அமைதியை தேடட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்திற்கான டிக்கெட்டை கொடுக்கிறோம். படத்தை பார்த்து மகிழுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
நடிகை டாப்ஸி பன்னு, இந்த சம்பவத்திற்கு கோபமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். “ராதா ரவியின் பேச்சில் உள்ள அருவெறுப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. சினிமா துறையில் தனக்கென்ற தனியிடத்தை வலுவாக பெற்ற நடிகைக்கு கேரக்டர் சர்ட்டிஃபிகேட் கொடுக்க இவர் யார்? புகழ்பெற்ற நடிகைக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது” தெரிவித்திருந்தார்
நயன்தாராவைப் பற்றி அவதூறாக பேசியதற்கு பாடகி சின்மயி, வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.