This Article is From Sep 22, 2018

என்.டி.டி.வி. சிறப்பு செய்தி : ‘ரஃபேல் விவகாரத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியது உண்மைதான்’

ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலந்தே கூறிய கருத்துகள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன

Rafale deal: பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா

New Delhi:

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் (Rafale deal) இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் டிஃபன்ஸைத்தான் மத்திய அரசு பரிந்துரை செய்து என நேற்று தகவல் வெளியானது. இதனை பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலந்தே கூறியதாக பிரான்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ஹாலந்தே கூறியதாக வந்த செய்தியில் உள்ள கருத்துகளில் மாற்றம் ஏதும் இல்லை என அதிபர் அலுவலகம் என்.டி.டி.வி.யிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் இந்த விவகாரம் இன்னும் பெரிதாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் ஆதாரமில்லாதவை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ரஃபேல் விவகாரம் தொடர்பான அண்மை தகவல்கள்

  1. ரஃபேல் விமானங்களை இந்தியாவில் அசெம்பிள் செய்யும் இந்திய தொழில்துறை நிறுவனத்தை தாங்கள் தேர்வு செய்யவில்லை என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
  2. போர் தளவாடங்களை தயாரிக்கும் பிரான்ஸ் நிறுவனமான டஸாட், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை தான்தான் தேர்வு செய்ததாக கூறியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டப்படி இதற்கான உரிமை தங்களுக்கு உண்டு என்பதையும் டசாட் சுட்டிக் காட்டியுள்ளது.
  3. வெள்ளியன்று காலை வெளியான பிரான்ஸ் பத்திரிகையில், “இந்திய அரசுதான் ரிலையன்ஸ் டிஃபன்ஸை பரிந்துரைத்தது. பின்னர் டசாட் நிறுவனம் ரிலையன்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்திய தொழில்நிறுவனத்தை தேர்வு செய்யும் உரிமை எங்களுக்கு கிடையாது. இந்திய அரசு யாரை பரிந்துரைக்கிறதோ அவர்களைத்தான் ஏற்க முடியும்” என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலந்தே கூறியதாக செய்தி வெளியானது.
  4. குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அரசு, வர்த்தக விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளது.
  5. ஹாலந்தேவின் கருத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றன.
  6. நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி அரசு துரோகம் செய்து விட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
  7. மத்திய பாதுகாப்பு துறை மீது, ரூ. 1.3 லட்சம் கோடி மதிப்பில் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை மோடி நடத்தியுள்ளார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
  8. ரஃபேல் விவகாரத்தில் வெளிவந்த தகவல்களை விட வெளிவராத உண்மைகள் அதிகம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
  9. ரிலையன்ஸ் டிஃபன்ஸை தேர்வு செய்தது டசால்ட்தான் என்றும் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்றும் மத்திய அரசு கூறி வருகிறது.
  10. ரஃபேல் ஒப்பந்தப்படி அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிஃபன்ஸ்‘ நிறுவனம் இந்தியாவில் போர் விமானங்களை அசெம்பிள் செய்யும். டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 30 ஆயிரம் கோடி. இதில் ரஃபேல் போர் விமான பகுதிகளை ரிலையன்ஸ் தயாரிக்காது. அதனை டசால்ட் தயாரித்து இந்தியாவுக்கு அனுப்பும். ரிலையன்ஸ் டிஃபன்ஸ் அசெம்பிள் செய்து போர் விமானங்களை தயாரிக்கும். முறைப்படி இதனை ரிலையன்ஸுக்கு பதிலாக ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு இந்த பணி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

.