This Article is From Sep 24, 2018

‘ரஃபேல் விவகாரம் இரு நாட்டு உறவை பாதிக்கும்!’- பிரான்ஸ் அரசு குமுறல்

Rafale Deal: ரஃபேல் விவகாரம் தொடர்பாக நிலவி வரும் சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது

‘ரஃபேல் விவகாரம் இரு நாட்டு உறவை பாதிக்கும்!’- பிரான்ஸ் அரசு குமுறல்

ரஃபேல் ஒப்பந்ததில் விமான பாகங்களை செய்த்த ரிலையன்ஸ் குழுமத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • ரிலையன்ஸ் குழுமத்தைத் தான் இந்தியா சிபாரிசு செய்தது, ஹாலண்டே
  • ஹாலண்டேவின் கருத்தால் ரஃபேல் விவகாரம் பூதாகரமாகியுள்ளது
  • ஒரு முன்னாள் அதிபர் அப்படி பேசியிருக்கக் கூடாது, பிரான்ஸ் அரசு
Paris:

ரஃபேல் ஒப்பந்த (Rafale Deal) விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், அந்நாட்டு அரசு, ‘ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நிலவி வரும் சர்ச்சையால் இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான உறவு பாதிப்புக்கு உள்ளாகும்’ என்று வருத்தம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், விமானத்துக்கு அதிக பணம் கொடுத்து வாங்கப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து டசால்ட் ஏவியேஷன் விமானங்களை தயாரிக்க உள்ளதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்துக்கு ராணுவ விமானங்களுக்கான பாகங்களைத் தயாரிக்க போதுமான அனுபவம் இல்லையென்றும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்றும் காங்கிரஸ் தரப்பு கூறி வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே, ‘ரஃபேல் ஒப்பந்தத்தைப் (Rafale Deal) பொறுத்தவரை இந்திய அரசு, அனில் அம்பானியின் நிறுவனத்துடன் மட்டும் தான் கூட்டு சேர்ந்து பணிகள் செய்யச் சொன்னது. எங்களுக்கு வேறு எந்த நிறுவனம் குறித்தும் சிபாரிசு செய்யப்படவில்லை’ என்று சமீபத்தில் பகீர் கருத்து கூறினார். அவரின் இந்தக் கருத்து ரஃபேல் விவகாரம் தொடர்பாக நிலவி வரும் சர்ச்சையை மேலும் அதிகரித்தது. 

ஹாலண்டே கருத்து கூறியதை அடுத்து பிரான்ஸ் நாட்டின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்- பாப்டிஸ்ட் லெமாய்ன், ‘இன்னொரு நாடு சம்பந்தப்பட்டுள்ள ஒரு விவகாரம் குறித்து ஹாலண்டே இப்படி கருத்து கூறியிருப்பதால் பிரான்ஸுக்கும் இந்தியாவுக்குமான உறவு பாதிக்கப்படும். தற்போது அரசின் ஒரு அங்கமாக இல்லாத ஒருவர், இரு நாட்டு அரசுகள் போட்ட ஒப்பந்தம் குறித்து கருத்து கூறுவது ஏற்புடையதல்ல’ என்று குமுறியுள்ளார். 

ஹாலண்டேவின் கருத்தை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர், இந்திய பிரதமர் மோடியை திருடன் என்று கூறுகிறார். இது பிரதமர் பதவிக்கு ஏற்பட்டுள்ள கலங்கம்’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

.