ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டன என அட்டார்னி ஜெனரல் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹைலைட்ஸ்
- அட்டார்னி ஜெனரலின் முந்தைய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- தவறான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்று கூறினார்.
- மறுசீராய்வு தாக்கல் செய்த நிலையில் திருடப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
New Delhi: ரஃபேல் ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் தெரிவித்த நிலையில், தற்போது ரஃபேல் விமான கொள்முதல் ஆவணங்கள் திருடப்படவில்லை என்றும் மனுதாரர்களால் அதன் நகல்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் விமான கொள்முதல் ஆவணங்கள் திருடப்பட்டதாக அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியதுத பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வளவு முக்கியத்துவமான ஆவணங்கள் திருடப்படும் அளவிலே மத்திய அரசு உள்ளது என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறிவருகிறார். இதேபோல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாயாவதி, சரத் பவார் உள்ளிட்டோரும் அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதனால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் விதத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாக எதிர்கட்சிகள் வாதாடி வந்தன. ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது.
யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 3 ஆவணங்களும், அசல் ஆவணங்களின் நகல்கள் ஆகும். நகள்களையே அவர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.