This Article is From Jul 27, 2020

முதல்கட்ட ரஃபேல் ஜெட் விமானங்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா புறப்பட்டது!

Rafale Deal: 2021 இறுதிக்குள் 36 ஜெட் விமானங்களும் ஒப்படைக்கப்படும். இதில், தற்போது 10 விமானங்களுக்கான பணி திட்டமிட்டபடி முடிக்கப்பட்டுள்ளது.

India Rafale Deal: Tமுதல்கட்ட ரஃபேல் ஜெட் விமானங்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா புறப்பட்டது!

New Delhi:

பிரான்ஸ் நாட்டிலிருந்து இன்று முதல்கட்டமாக 5 ரஃபேல் ஜெட் விமானங்கள் புறப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் 29ம் தேதி இந்தியா வந்து சேரும். இதையடுத்து, ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படையில் அந்த விமானங்கள் சேர்க்கப்படும். 

இந்த ஐந்து ஜெட் விமானங்களும் கடந்த 2016ம் ஆண்டில் ரூ.59,000 கோடி ஒப்பந்தத்தில் பிரான்சிலிருந்து இந்தியா வாங்கிய 36 விமானங்களில் முதல்கட்ட தொகுப்பாகும். 

பன்னிரண்டு இந்திய விமானப்படை விமானிகள் மற்றும் பொறியியல் குழு உறுப்பினர்கள் ரஃபேல் ஜெட் போர் விமானங்களில் பயிற்சி பெற்றவர்கள் இந்த ஜெட் விமானத்தை இயக்கி வருகின்றனர்.

பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு ஏறக்குறைய 7,000 கி.மீ தூரம் பயணப்பட உள்ள இந்த விமானங்களுக்கு, அம்பாலாவுக்கு வரும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரெஞ்சு விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படும்.

பிரான்சில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் இந்திய விமானிகளுடன் பிரான்சிற்கான இந்திய தூதர் உரையாடினார்.

இதுதொடர்பாக பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பதிவில், இந்திய விமானிகளுடன் உரையாற்றியது குறித்து குறிப்பட்டது போல், இந்தியாவுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளது.

மேலும், 2021 இறுதிக்குள் 36 ஜெட் விமானங்களும் ஒப்படைக்கப்படும். இதில், தற்போது 10 விமானங்களுக்கான பணி திட்டமிட்டபடி முடிக்கப்பட்டுள்ளது. 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலே இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானப்படை தனது பக்கம் இந்த புதிய ஜெட் விமானங்களை வரவேற்க தேவையான உள்கட்டமைப்பை தயார் செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த மாதம், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லியுடன் தொலைபேசியில் உரையாடினார், அவர் கொரோனா வைரஸ் தொற்றுநோயையும் மீறி திட்டமிட்டபடி முதல் கட்ட விமானத்தை வழங்குவதாக உறுதியளித்தார்.

.