This Article is From Nov 21, 2019

3 Rafale  விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன : மத்திய அரசு

விமானம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையின்போது இறுதி செய்யப்பட்ட விகிதங்களை விட ஜெட் விமானங்களின் விலை 2.86 சதவீதம் குறைவாக இருப்பதாக நாயக் தெரிவித்தா

3 Rafale  விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன : மத்திய அரசு

தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பயிற்சி திட்டத்தின் ஒருபகுதியாக அவை இன்னும் பிரான்ஸில் வைக்கப்பட்டுள்ளன (File)

New Delhi:

விமான நிறுவனமான டசால்ட் இதுவரை மூன்று ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்கு ஒப்படைத்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய விமானப்படை விமானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பயிற்சி திட்டத்தின் ஒருபகுதியாக அவை இன்னும் பிரான்ஸில் வைக்கப்பட்டுள்ளன என்று அது தெளிவுபடுத்தியது. 

மக்களவையில் கேள்விக்கு இந்த பதிலினை அளித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ஶ்ரீபட் நாயக். ரூ. 59,000கோடி ரஃபேல் ஜெட் ஒப்பந்தம், 36 ரஃபேல் ஜெட் விமானங்களில் நான்கு விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள விமானங்கள் செப்டம்பர் 2022க்குள் வரும். 

முதல் ரஃபேல் விமானம் ஆர்.பி -001ஐ பிரான்ஸ் கடந்த மாதம் இந்தியாவுக்கு ஒப்படைத்தது. டசால்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விமானம் வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். 

பூஜை செய்தபின் ராஜ்நாத் சிங் விமானத்தில் 20 நிமிடம் பயணத்தை மேற்கொண்டார். மற்ற இரண்டு விமானங்கள் ஒப்படைக்கப்பட்டது குறித்த தகவலை இதற்கு முன் ஶ்ரீபட் நாயக் தெரிவிக்கவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விமானம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையின்போது இறுதி செய்யப்பட்ட விகிதங்களை விட ஜெட் விமானங்களின் விலை 2.86 சதவீதம் குறைவாக இருப்பதாக நாயக் தெரிவித்தார். 

இந்தியாவில் ஜெட் விமானங்களை தயாரிக்க இந்திய அரசு எந்த நிறுவனத்தையும் பரிந்துரைக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

.