This Article is From Jul 29, 2020

இந்தியா வந்தடைகிறது ரஃபேல் போர் விமானங்கள்: விமானப்படை தளபதி வரவேற்கிறார்!

இதனிடையே, பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் ஜெட் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பிய காட்சிகள் இணையதங்களங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்தியா வந்தடைகிறது ரஃபேல் போர் விமானங்கள்: விமானப்படை தளபதி வரவேற்கிறார்!

ஹைலைட்ஸ்

  • First five Rafale jets will touch down at Haryana's Ambala this afternoon
  • Chief of Air Staff RKS Bhadauria will be at air base to receive the jets
  • A Rs 59,000-crore deal was signed on September 23, 2016 for 36 jets
New Delhi:

பிரான்ஸிலிருந்து கிட்டதட்ட 7,000 கி.மீ. தூரத்தை கடந்து, 5 ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்துக்கு இன்று பிற்பகல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விமானப்படைத் தளபதி ஆர்கேஎஸ் பகதூரியா ரஃபேல் போர் விமானங்களை வரவேற்று, படையில் சேர்க்கிறார். இது கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவில் இல்லாத அளவிலான முதல் போர் விமானமாகும். 

பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.59,000 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 

பாகிஸ்தானின் எல்லையிலிருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள விமானப்படை தளத்துக்கு அருகே பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது, அதன் அருகிலுள்ள நான்கு கிராமங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, விமானம் தரையிரங்கும் போது, மக்கள் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கும், மாடிகளில் கூடுவதற்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஜெட் விமானங்களை வரவேற்கு மக்கள் அனைவரும் வீடுகளில் மெழுவர்த்தி ஏற்றி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். 

இதனிடையே, பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் ஜெட் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பிய காட்சிகள் இணையதங்களங்களில் வைரலாக பரவி வருகின்றன. 

இதுதொடர்பாக இந்தியா விமானப்படை தனது ட்விட்டர் பதிவில், முதல்கட்டமாக இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள், பிரான்ஸ் விமானப்படையின் விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பின. ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா விமானப் படை தளத்தில் 5 போர் விமானங்களும் நேற்று தரையிறங்குவது முன்பு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். 

டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஜெட் விமானங்கள் பிரான்ஸின் பாடோ நகரில் உள்ள மேரிங்நாக் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இந்தியா புறப்பட்டன. 

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, முதல் ரஃபேல் விமானம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, விமானங்கள் தயாரானாலும், விமானிகளும், மெக்கானிக்குகளும் பயிற்சி பெறுவதற்காக விமானங்கள் பிரான்ஸிலே நீண்ட நாட்களாக இருந்தன.  

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த விமானங்கள் இந்தியாவின் பலத்தை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, மீதமுள்ள விமானங்களும் 2022க்குள் இந்தியா வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.