ரஃபியா ரஹீம் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
Srinagar: 24 வயதான ரஃபியா ரஹீம் காஷ்மீரின் புத்கம் பகுதியின் முதல் பெண் ரேடியோ ஜாக்கி ஆகியுள்ளார். ஷாராரி சாரிஃப் நகரத்தில் வசித்து வரும் அவர், உள்ளூர் நிகழ்வுகள் பலவற்றை தொகுத்து வழங்கியதன் மூலம் தற்போது காஷ்மீரில் பிரபலமடைந்துள்ளார்.
ரஃபியா தனியார் ரேடியோ நிலையத்தில் முதல் பெண் ரேடியோ ஜாக்கி ஆகியுள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத்தில் ஊடக கல்வி படித்து முடித்துள்ளார்.
ரஃபியா ரஹீம் காஷ்மீரின் ஷாராரி சாரிஃப் பகுதியில் வசித்து வருகிறார்.
தூர்தர்ஷனில் குட்மார்னிங் ஜம்மு&காஷ்மீர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். அந்நிகழ்ச்சி சமூக பிரச்சனைகள் குறித்த விவாதிப்பதாகும். உள்ளூர் ஆங்கில பத்திரிக்கையில் பணியாற்றி வந்த சமயத்தில் ரேடியோ ஜாக்கியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிப்ரவரி மாதத்தில் ரேடியோ ஜாக்கியாக தேர்வானேன். அந்த ரேடியோ நிலையம் மூலம் சண்டிகரில் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்கு பின் தற்போது, என்னுடைய நிகழ்ச்சியின் மூலம் மக்களை அவர்களுடைய பதட்டம், சோர்வு மற்றும் சோகத்திலிருந்து விடுவிக்கிறேன். என் பணியால் மக்கள் என்னை அடையாளம் காண்பது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.