This Article is From Jul 20, 2018

முதல் முயற்சியிலேயே ஏய்ம்ஸ் தேர்வில் தேர்ச்சி; துப்புரவு தொழிலாளியின் மகன் சாதனை

மருத்துவ படிப்பிற்காக நடைப்பெறும் ஏய்ம்ஸ் நுழைவுத் தேர்வில், துப்புரவு தொழிலாளி மகன் ஆஷாராம் சவுத்ரி தேசிய அளவில் 707வது இடம் பிடித்துள்ளார்

முதல் முயற்சியிலேயே ஏய்ம்ஸ் தேர்வில் தேர்ச்சி; துப்புரவு தொழிலாளியின் மகன் சாதனை
Dewas (Madhya Pradesh):

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம், தேவாஸ் மாவட்டத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளி ஒருவரின் மகன் ஏய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மருத்துவ படிப்பிற்காக நடைப்பெறும் ஏய்ம்ஸ் நுழைவுத் தேர்வில், துப்புரவு தொழிலாளி மகன் ஆஷாராம் சவுத்ரி தேசிய அளவில் 707வது இடம் பிடித்துள்ளார். இதன் மூலம், ஜோத்பூர் ஏய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை தொடங்க இருக்கிறார்.

இந்த தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ சேவை ஆற்றுவதற்க்கு தூண்டுகோளாய் இருந்த தன் கிராம மருத்துவர்களுக்கும், கல்வி படிப்பிற்கு உதவி செய்த தக்‌ஷினா பவுன்டேஷனிற்கும் ஆஷாராம் நன்றி தெரிவித்தார்.

பின் தங்கிய குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று வருகின்றனர். கடந்த 2013 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சார்ட்டட் அக்கவுன்டன்ட் நுழைவு தேர்வில், முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் முதலிடம் பிடித்த பிரேமா ஜெயக்குமாரின் தந்தை மும்பையில் ஆட்டோ ஓட்னர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவில் சர்வீஸ் தேர்வில், விவாசாய குடும்பத்தை சேர்ந்த கோபாலகிருஷ்னா ரொனான்கி தேசிய அள்வில் மூன்றாம் இடத்தை பிடித்தார். சமூகத்திற்காகவும், குடும்பத்தின் நிலையை மாற்றுவதற்காகவும் உழைக்க வேண்டும் என்று கோபாலகிருஷ்னா குறிப்பிட்டிருந்தார்.

.