Read in English
This Article is From Oct 15, 2018

“இந்துக்களை ராகுல் காந்தி தீவிரவாதி என்கிறார்”- ராஜஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

ராஜஸ்தானில் தேர்தல் வரும் நிலையில் அம்மாநில அமைச்சர் ஒருவர் ராகுல காந்தி மீது குற்றச்சாட்டு வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement
இந்தியா
New Delhi:

ராஜஸ்தானில் மாநில தேர்தல் வருவதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அம்மாநில அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, “ ராகுல் காந்தி இந்துக்கள் அனைவரையும் தீவிரவாதி என்று பேசுகிறார். இதுபோன்றவர் எல்லாம் பிரதமர் ஆகி என்ன பிரயோஜனம் ஏற்பட போகிறது. இதற்கான அர்த்தம் என்ன?. பாகிஸ்தானை சமாதானப்படுத்த விரும்பினால், அதற்கு இந்துக்களைத்தான் பயன்படுத்த வேண்டுமா என்று கூறினார்.
 

முன்னதாக பல்வேறு சர்ச்சை கருத்துக்களை ஜஸ்வந்த் சிங் யாதவ் கூறியுள்ளார். ஆல்வார் சம்பவம் நடந்தபோது, முஸ்லிம்கள் அனைவரும் மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை குற்றம்சாட்டிய ஜஸ்வந்த் யாதவ் அவர், மம்தாவுக்கு அறிவே இல்லை என்றும், இந்தியாவை அவர் நேசிக்கவில்லை என்றும் கூறினார். இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டும் என மம்தாவை வலியுறுத்திய அவர், மம்தாவின் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

Advertisement