This Article is From Jan 03, 2019

ரஃபேல் விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? மோடிக்கு ராகுல் சவால்

எனக்கு 20 நிமிடங்கள் மட்டுமே தாருங்கள். மோடியுடன் ரஃபேல் ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்கிறேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ரஃபேல் விவகாரம் குறித்து ராகுல் காந்தி இன்று பிரச்னை எழுப்பினார்

New Delhi:

ரஃபேல் விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரச்னை எழுப்பினார். அப்போது, ரஃபேல் விவகாரத்தில் தன் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்காமல் தனது அறையில் ஒளிந்து கொள்கிறார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்.பி.க்கள் பின்னால் ஒளிந்து கொள்கிறார்'' என்று பேசினார்.

இதன்பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

ரஃபேல் விவகாரத்தில் செய்யப்பட்ட ஊழல் குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க மோடி தயாரா? எனக்கு 20 நிமிடங்கள் மட்டுமே தாருங்கள். அவருடன் நான் விவாதம் செய்கிறேன். ஆனால் இதற்கு பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். முன்னதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி 95 நிமிடங்கள் பேட்டி அளித்தார். அதில், ''ரஃபேல் விவகாரம் குறித்து என்னை யாரும் கேள்வி எழுப்ப முடியாது'' என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் காந்தி இன்று பேசியிருக்கிறார்.
 

.