Read in English
This Article is From Nov 30, 2018

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி பங்கேற்பு!

விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் அதிகமான விவசாயக் குழுக்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
இந்தியா Posted by

விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி இன்று காலை புறப்பட்டனர். விவசாயிகள் போராட்டத்திற்கு ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத்பவார், தேவ கவுடா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்ற உள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு எதிர்கட்சித் தலைவர்கள் சரத் பவார், சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா, சரத் யாதவ் உட்பட 21 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.

 

ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்குவங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் கூடியுள்ளனர். கிட்டதட்ட 35,000த்திற்கும் அதிகமான விவசாயிகள் நாடாளுமன்ற சாலை அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

இதில் தெலுங்கானாவில் இருந்த வந்த ஒரு சில பெண்கள், தற்கொலை செய்து கொண்ட தங்களது கணவர்களின் புகைப்படங்களை கழுத்தில் தொங்க விட்டப்படி சாலையில் பேரணி சென்றனர்.

Advertisement