This Article is From May 08, 2020

மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி? - அவரே அளித்த விளக்கம்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவுக்கு சமீபத்தில் தாவினார். இன்னும் அவர், சில முக்கியப்புள்ளிகளை காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு கொண்டுசெல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி? - அவரே அளித்த விளக்கம்!!

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கடந்த ஆண்டு கட்சி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

ஹைலைட்ஸ்

  • 2019 பொதுத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகினார்
  • ராகுல் மீண்டும் தலைவராக பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் வெளியானது
  • தன்னைப் பற்றிய கேள்விகளுக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
New Delhi:

காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பு ஏற்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என்று ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி இருந்து வரும் நிலையில், அவரை விடவும் ராகுலின் செயல்பாடுகள் இந்த பொது முடக்க காலத்தில் அதிகரித்திருக்கின்றன.

49 வயதாகும் ராகுல் காந்தி ஆன்லைனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் அவர் 2-வது முறையாக பேட்டி அளித்துள்ளார். 

முன்னதாக அவர், பொருளாதார வல்லுனர்களான ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி ஆகியோருடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மீண்டும் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக உயர்த்தப்படலாம் என பேசப்பட்டது.

இந்த நிலையில் இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது- 

கட்சி தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று கூறித்தான் கடந்த ஆண்டு ஜூலையில் ராஜினாமா கடிதம் அளித்தேன். இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் உறுதியாக இருக்கிறேன். 

கட்சியின் தலைவர் என்ற முறையில் 2019-ல் நடந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு நான்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். எப்போது தேவைப்பட்டாலும் கட்சிப்பணியாற்ற நான் தயாராக உள்ளேன். 

பொருளாதார வல்லுனர்கள் நான் பேசியதற்கு மக்களிடம் நல்ல தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதுதான் காரணம். மற்றபடி, அதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. 
இவ்வாறு அவர் கூறினார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவுக்கு சமீபத்தில் தாவினார். இன்னும் அவர், சில முக்கியப்புள்ளிகளை காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு கொண்டுசெல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

.