This Article is From Jun 16, 2020

நாட்டிலே அதிக உயிரிழப்பு விகிதம்: அம்பலமானது ’குஜராத் மாடல்’! - ராகுல் விமர்சனம்

கொரோனா உயிரிழப்பு விகிதம்: குஜராத் - 6.25%, மகாராஷ்டிரா - 3.73%, ராஜஸ்தான் - 2.32%, பஞ்சாப் - 2.17%, புதுச்சேரி - 1.98%, ஜார்கண்ட் - 0.5%, சத்தீஸ்கர் - 0.35% இதன் மூலம் குஜராத் மாடல் அம்பலமாகியுள்ளது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

நாட்டிலே அதிக உயிரிழப்பு விகிதம்: அம்பலமானது ’குஜராத் மாடல்’! - ராகுல் விமர்சனம்

நாட்டிலே அதிக உயிரிழப்பு விகிதம்: அம்லபலமானது ’குஜராத் மாடல்’! - ராகுல் விமர்சனம்

ஹைலைட்ஸ்

  • நாட்டிலே அதிக உயிரிழப்பு விகிதம்: அம்லபலமானது’குஜராத் மாடல்’
  • குஜராத் மாடல் அம்பலமானதாக ராகுல் காந்தி ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சனம்
  • நேற்று விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை மேற்கோள் காட்டி விமர்சித்திருந்தார்
New Delhi:

நாட்டிலே அதிக கொரோனா வைரஸ் உயிரிழப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளது குறித்து, குஜராத் மாடல் அம்பலமானதாக ராகுல் காந்தி ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

கொரோனா வைரஸ் நெருக்கடியை கையாளும் விதம் குறித்து தினமும் தனது பதிவுகளில் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்றைய தினம் அறிவியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை மேற்கோள் காட்டி விமர்சித்திருந்தார். அதில், இந்த லாக்டவுன் ஒரேயொரு விஷயத்தை உறுதிபட தெரிவிக்கிறது: ‘அறியாமையைவிட மிக ஆபத்தானது ஆணவம் என்கிற ஒரேயொரு விஷயம்தான்'  என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கருத்தை தெரிவித்திருந்தார்.

கொரோனா உயிரிழப்பு விகிதம்: குஜராத் - 6.25%, மகாராஷ்டிரா - 3.73%, ராஜஸ்தான் - 2.32%, பஞ்சாப் - 2.17%, புதுச்சேரி - 1.98%, ஜார்கண்ட் - 0.5%, சத்தீஸ்கர் - 0.35% இதன் மூலம் குஜராத் மாடல் அம்பலமாகியுள்ளது என்று ராகுல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் அதிக உயிரிழப்பு விகிதம் பதிவாகியுள்ளதை ஆய்வு செய்து பிபிசி வெளியிட்ட அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லியை தொடர்ந்து, குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால், குஜராத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மட்டும் உயர்ந்து வருகிறது. இது தேசிய சராசரியான 2.86 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.  

கடந்த மாதத்தில் மட்டும், புதிதாக 400 பேருக்கு சராசரியாக தினமும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. 

குஜராத் மாநிலத்தில் மொத்தமாக 24,104 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிகையானது 1,500ஐ கடந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்திகளுக்கு மாநில முதல்வர் விஜய் ரூபானி மறுப்பு தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் மொத்தமுள்ள 75 சதவீத பாதிப்பும், மாநிலத்தில் பெரும் நகரமான அகமதாபாத்தில் இருந்து தான் ஏற்பட்டுள்ளது. 

.