This Article is From Dec 07, 2019

'இந்தியாவை ஆள்பவர் வன்முறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்' : மோடியை விமர்சித்த ராகுல்!!

'மத்திய அரசு நிறுவன அமைப்பு மாற்றி அமைக்கப்படவதற்கும், சட்டத்தை சிலர் தங்களது கைகளில் எடுத்துக் கொள்வதற்கும் காரணம் உள்ளது' என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

'இந்தியாவை ஆள்பவர் வன்முறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்' : மோடியை விமர்சித்த ராகுல்!!

சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் உரையாற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

ஹைலைட்ஸ்

  • கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்
  • பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்
  • உன்னாவோ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ராகுல் கருத்து
Wayanad:

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றச் செயல்களை சுட்டிக்காட்டி, மோடியை ராகுல் விமர்சித்துள்ளார். 

'பாலியல் பலாத்காரங்களுக்கு உலகின் தலைநகரமாக இந்தியா கருதப்படும். ஏராளமான சம்பவங்களில் நமது சகோதரிகள், மகள்கள் பாதிக்கப்பட்ட பின்னரும் பலாத்காரங்கள் ஏன் குறையவில்லை என்று வெளிநாடுகள் கேள்வி எழுப்புகின்றன' என்று ராகல் பேசியுள்ளர். 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நீதிமன்றத்திற்கு செல்லும்போது, அவரை 5 பேர் கொண்ட கும்பல் தீயிட்டு எரித்துக் கொன்றது. ஐதராபாதில் கால்நடை பெண் மருத்தவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டார். இந்த சம்பவங்களை மேற்கோளிட்டு ராகுல் விமர்சித்துள்ளார். 

சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது-
'மத்திய அரசு நிறுவன அமைப்பு மாற்றி அமைக்கப்படவதற்கும், சட்டத்தை சிலர் தங்களது கைகளில் எடுத்துக் கொள்வதற்கும் காரணம் உள்ளது. ஏனென்றால் இந்த நாட்டை ஆள்பவர் வன்முறையின் மீதும் அதிகார துஷ்பிரயோகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர். உத்தப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. ஒருவர் பாலியல் பலாத்கார குற்றத்தில் தொடர்புடையவராக உள்ளார். இதுபற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசிவில்லை' 

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். உன்னாவோ சம்பவத்தில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
 

.

ஐதரபாத்தில் 27 வயதான பெண் கால்நடை மருத்துவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை  பிடித்த போலீசார் நேற்று காலையில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தற்காப்புக்காக இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

குற்றம் தொடர்பான விசாரணையின்போது போலீசாரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் துப்பாக்கியை பறித்து தாக்கியதாகவும், இதையடுத்து தற்காப்புக்காக என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாகவும் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அவர் கூறினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவில் பலாத்காரத்திற்கு ஆளான 23 வயது இளம்பெண், 5 பேர் கொண்ட கும்பலால் தீயிட்டு எரிக்கப்பட்டார். அவருக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பால் இன்று அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருந்த ராகுல் காந்தி, 'அப்பாவி உன்னாவோ பெண்ணின் மரணம் பெரும் துயரத்தை அளிக்கிறது. இது மனிதத்தன்மைக்கு நேர்ந்த அவமானமாகும். பெரும் கோபத்தையும், அதிர்ச்சியையும் எனக்கு அளிக்கிறது. நீதிக்கும், பாதுகாப்பிற்கும் நாம் வலியுறுத்தி வரும் நிலையில் மேலும் ஒரு மகளை நாம் இழந்து நிற்கிறோம். அவரது குடும்பத்திற்கு எனது இரங்கலை இந்த துயரமான நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

.