This Article is From Mar 15, 2019

பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி தமிழகம் வருகை!

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நாகர்கோவில் இன்று நடைபெறுகிறது. இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.

Advertisement
இந்தியா Written by

தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று நாகர்கோவலில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சென்னை வருகை தந்துள்ளார்.

Advertisement

இன்று காலை 11.30 மணிக்கு சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் ராகுல்காந்தி கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், மதியம் 1 மணியளவில் கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலுக்கு வரும் அவர் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கிறார்.

பின்னர், அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்பட்டு செல்லும் அவர், விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து, கார் மூலம் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்துக்கு அவர் வருகிறார். மாலை 4 மணிக்கு அங்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது.

Advertisement

இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

 

Advertisement

மேலும் படிக்க: மக்களவை தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிட மாட்டார் : காங்கிரஸ் அறிவிப்பு
 

Advertisement