This Article is From Jun 11, 2019

’முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார் யோகி’ பத்திரிகையாளர் கைது விவகாரத்திற்கு ராகுல் கண்டனம்!

யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக, பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

’முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார் யோகி’ பத்திரிகையாளர் கைது விவகாரத்திற்கு ராகுல் கண்டனம்!

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை விடுவிக்க ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

New Delhi:


உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ள 3 பத்திரிகையாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக நாட்டின் கருத்துச் சுதந்திரம் குறித்து, சமூகவலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. 

யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக, பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, என்னை பற்றி அவதுறாக செய்தி வெளியிடுவோரை சிறையில் அடைப்பதாக இருந்தால் பல நாளிதழ்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்.

'உத்தரபிரதேச முதல்வர் முட்டாள்தனமாக செயல்படுகிறார்', கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இந்த கைது நடவடிக்கையானது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என காங்கிரஸ் தொடர்ந்து, தெரிவித்து வந்தது. 

முன்னதாக, உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை டெல்லியை சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள கனோஜின் வீட்டில் இருந்து லக்னோவுக்கு அழைத்துச் சென்ற உத்தரபிரதேச போலீசார் அவரை கைது செய்தனர். 

அந்தப் பெண் பேசும் வீடியோவை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பியதை அடுத்து, அந்த சேனலின் தலைமையாசிரியர் ஈஷிகா சிங், செய்தி ஆசிரியர் அணுஜ் சுக்லா, ஆகியோரையும் உத்தரபிரதேச போலீசார் கைது செய்தனர்.

.