This Article is From Mar 31, 2019

தோல்வி பயத்தில் கேரளாவை நோக்கி ஓடுகிறார் ராகுல்! - அமித்ஷா கிண்டல்

மக்களவைத் தேர்தல் 2019: அமேதி மக்களுக்கும், தொகுதிக்கு எதுவுமே செய்யாததால் மக்களின் கேள்விகளுக்கு பயந்து ராகுல் வயநாட்டுக்கு ஓட்டம்பிடித்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார்.

தோல்வி பயத்தில் கேரளாவை நோக்கி ஓடுகிறார் ராகுல்! - அமித்ஷா கிண்டல்

வயநாட்டை தேர்வு செய்ததன் மூலம் அவர் அமேதியில் பின்னடைவு கண்டுள்ளார் என்பது தெரிகிறது.

Dhampur:

உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியை தவிர்த்து கேரள மாநிலம் வயநாட்டிலும் இரண்டாவது தொகுதியாக ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்று இன்று காலை காங்கிரஸ் அறிவித்ததை தொடர்ந்து, அமேதி மக்களுக்கும், தொகுதிக்கு எதுவும் செய்யாததால் மக்களின் கேள்விகளுக்கு பயந்து ராகுல் வயநாட்டுக்கு ஓட்டம்பிடித்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் வழக்கமாக போட்டியிடும் தனது குடும்ப தொகுதியான அமேதியை தவிர்த்து, இரண்டாவது தொகுதியாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி அறிவித்தார்.

இந்நிலையில், இன்று உத்தரபிரதேசத்தில் தனது முதல் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, அமேதி தொகுதியை விட்டுவிட்டு, ராகுல் காந்தி கேரளம் நோக்கி ஓடுவதாக வாட்ஸ்ஆப்பில் படித்தேன். ராகுல் ஏன் கேரளாவை நோக்கி ஓடுகிறார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

அமேதி தொகுதிக்கு அவர் என்ன செய்தார்? அங்கு ராகுல் மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதனால், அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் கேரளம் நோக்கி சென்றுள்ளார் என்று அவர் கூறினார்.

2004ஆம் ஆண்டில் இருந்து ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுகிறார். இருந்தும் கடந்த 2014 தேர்தலின் போது, அவர் குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசத்திலே ஸ்மிர்தி இரானியை வென்றார்.

இந்நிலையில், இந்த முறையும் மீண்டும் ராகுலை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி போட்டியிடுகிறார். முன்னதாக 2017 உத்தரபிரதேசம் சட்டமன்ற தேர்தலின் போது, அமேதி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவது ஆச்சரியம் இல்லை. அவர் பாஜகவை எதிர்த்துபோட்டியிடவில்லை, இடதுசாரிகளை எதிர்த்து போட்டியிடுகிறார். எனினும், நாங்களும் காங்கிரசுக்கு கடும் போட்டியாக இருப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

.