மாணவிகளுடன் உரையாற்றிய பின்னர், தன்னிடம் கடினமான கேள்விகளைக் கேட்கச் சொன்னார் ராகுல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வந்தார். அவர் சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் சென்று, அங்கிருக்கும் மாணவிகளுடன் உரையாற்றினார்.
மாணவிகளுடன் உரையாற்றிய பின்னர், தன்னிடம் கடினமான கேள்விகளைக் கேட்கச் சொன்னார் ராகுல். அப்போது ஒரு மாணவி, ‘ஹாய் சார்…' என்று சொல்லி கேள்வியை ஆரம்பித்தார். உடனே அவரை இடைமறித்த ராகுல், ‘என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடுங்க' என்றார். உடனே அந்த மாணவியும், ‘ஹாய் ராகுல்' என்றார். அதற்கு அங்கிருந்த மொத்த மாணவியர் கூட்டமும் கரகோஷம் ஏழுப்பியது.
தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்த ராகுலிடம், ‘ராபர்ட் வத்ரா குறித்து ஏன் பேச மறுக்கிறீர்கள்..?' என்று கேட்கப்பட்டது. அதற்கு ராகுல், ‘வத்ரா மீது இருக்கும் குற்றச்சாட்டை இந்த நாட்டின் விசாரணை அமைப்புகள் புலன் விசாரணை செய்ய வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நான்தான் அவர் மீது விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லும் முதல் நபர். அதே போல, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நரேந்திர மோடி மீதும் விசாரணை செய்யப்பட வேண்டும்.
விசாரணை என்பது குறிப்பிட்ட நபர் மீது இருக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்' என்று பதில் அளித்தார்.
மேலும் படிக்க: ராகுல் தமிழகம் வருகை! - டிவிட்டரில் டிரெண்டான #GoBackPappu