This Article is From Dec 06, 2019

நீங்கள் வெங்காயம் சாப்பிடுவீர்களா…? என்று யாரும் கேட்கவில்லை - நிதியமைச்சரை தாக்கிய ராகுல் காந்தி

எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர், “நீங்களும் வெங்காயம் சாப்பிடுவீர்கள்தானே, உங்களுக்கும் அதன் பாதிப்பு தெரியுமல்லவா, உங்களையும் கூட அது பாதிக்குமல்லவா?” என்று கேட்டார்.

நீங்கள் வெங்காயம் சாப்பிடுவீர்களா…?  என்று யாரும் கேட்கவில்லை - நிதியமைச்சரை தாக்கிய ராகுல் காந்தி

நீங்கள் நிதி அமைச்சர் பொருளாதாரம் ஏன் தடுமாறுகிறது என்று நாங்கள் கேட்கிறோம்- ராகுல் காந்தி

Wayanad:

காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி “நிர்மலா சீதாராமனிடம் நீங்கள் வெங்காயம் சாப்பிடுகிறீர்களா என்று கேட்கவில்லை. இந்திய பொருளாதாரம் ஏன் தடுமாறுகிறது என்பதையே மக்கள் அறிய விரும்புவதாக” கூறியுள்ளார்.

வெங்காய  விலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்தில் பேசிய எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர், “நீங்களும் வெங்காயம் சாப்பிடுவீர்கள்தானே, உங்களுக்கும் அதன் பாதிப்பு தெரியுமல்லவா, உங்களையும் கூட அது பாதிக்குமல்லவா?” என்று கேட்டார். 

இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், நான் பூண்டு வெங்காயத்தை சாப்பிட மாட்டேன். வெங்காயம் சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள் என்றார்.

நிதியமைச்சரின் பேச்சு கடும் சர்ச்சையை உருவாக்கியது. காங்கிரஸின் தலைமை கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நீங்கள் வெங்காயம் சாப்பிடுகிறீர்களா என்று யாரும் உங்களிடம் கேட்கவில்லை. நீங்கள் நிதி அமைச்சர் பொருளாதாரம் ஏன் தடுமாறுகிறது என்று நாங்கள் கேட்கிறோம். எளிய நபரிடம் நீங்கள் கேட்டாலும் விவேகமான பதில் கிடைத்திருக்கும்” என்று கூறினார். 

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பலமான பொருளாதாரத்தை அழித்து விட்டதாகவும் கூறினார். “நாங்கள் மக்களின் குரலை நம்புகிறோம். ஆனால் நரேந்திர மோடி தனது சொந்த நம்பிக்கையை மட்டுமே நம்புகிறார். அவர் எந்தவொரு கடைக்காரரிடமும் சென்று பணமதிப்பிழப்பு பற்றி கேட்கவில்லை. விவசாயிகளிடமோ அல்லது யாரிடமும் இது பற்றி கேட்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய பலத்தையும் பொருளாதாரத்தையும் அழித்தார். ஜிஎஸ்டி  எவ்வளவு அபத்தமானது என்பதை இப்போது நீங்கள் பார்க்கிறீர்களா? “ என்றும் கேள்வி எழுப்பினார். 

.