This Article is From Jul 06, 2020

“ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் தோல்வி பட்டியலில் பிரதமரின் திட்டங்கள்“: ராகுல் காந்தி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, மோடி அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்வியாக பணமதிப்பிழக்க நடவடிக்கையினை குறிப்பிட்டுள்ளது.

“ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் தோல்வி பட்டியலில் பிரதமரின் திட்டங்கள்“: ராகுல் காந்தி

தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து ராகுல் காந்தி தொடர்ந்து அரசாங்கத்தைத் விமர்சித்து வருகிறார்.

ஹைலைட்ஸ்

  • நாடு முழுவதும் கொரோனாஎண்ணிக்கையானது 7 லட்சத்தினை நெருங்குகிறது
  • கொரோனா தொற்று பரவல் தடுப்பு, ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு அரசின் தோல்விகள்
  • ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் கல்விகள் தோல்வியடைந்துள்ளது
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 7 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொற்று குறித்து பேசிய வீடியோவினை, காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி டிவிட்டரில் பகிர்ந்து, “பிரதமரின் திட்டங்கள் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் கல்வியின் தோல்வி பட்டியலில் இடம்பெறும்“ என கூறியுள்ளார். “கொரோனா தொற்று பரவல் தடுப்பு, ஜி.எஸ்.டி அமலாக்கம், பண மதிப்பிழப்பு இழப்பு போன்றவை  இந்த தோல்வியின் அடையாளங்கள்.“ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மகாபாரத போர் 18 நாட்கள் நடைபெற்றது என்றும், கொரோனா தொற்றுக்கு எதிரான போர் 21 நாட்கள் நடைபெறும் என்றும் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தும்போது பிரதமர் கூறியிருந்ததையும், கொரோனாவுக்கு எதிராக கையை தட்டியும், பாத்திரங்களில் மூலம் ஒலியெழுப்பியும், விளக்கேற்ற செய்யுமாறும் பிரதமர் கூறியிருந்த வீடியோவில் தற்போதைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையையும் இணைத்து ராகுல் காந்தி வீடியோவினை வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக பிரதமரின் திட்டங்கள் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின்  தோல்வியடைந்த பாடதிட்டத்தில் இடம்பெறும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தற்போது 6.97 லட்சம் கொரோனா நோயாளிகளைக் கொண்டு சர்வதேச அளவில் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இரண்டாவது நாளாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்தினை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் அன்லாக் செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முயன்று வருகின்றனர். கட்டுப்பாடுகளில் தளர்வுகள் பல அதிகரித்துள்ளன. மறுபுறம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, மோடி அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்வியாக பணமதிப்பிழக்க நடவடிக்கையினை குறிப்பிட்டுள்ளது.

.