Read in English
This Article is From Nov 14, 2018

தொழிலதிபர்கள் யாராவது பணங்களை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி

மோடி தலைமையிலான அரசு ரூ.30,000 கோடியை ஏழைகளிடமிருந்து பறித்து தொழிலதிபர்களின் பையில் வைத்துவிட்டார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Mahasamund, Chhattisgarh:

பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது ஏழைகளை காயப்படுத்தி, சூட் பூட் அணிந்த பணக்காரர்களுக்கு பயன் அளித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் கடுமையாக சாடியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ரஃபேல் போர் விமான ஒப்பந்ததத்தில் மூலம் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நல்ல பலன்களை ஏற்படுத்தி தந்துள்ளார்.

மோடி தலைமையிலான அரசு ரூ.30,000 கோடியை ஏழைகளிடமிருந்து பறித்து தொழிலதிபர்களின் பையில் வைத்துவிட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம்.

Advertisement

பணமதிப்பிழப்பு மூலம் தலையனைக்கு அடியில் இருக்கும் பணத்தை வெளியில் கொண்டுவருவோம் என்றார். அவர் கூறியது சரியே. யாரிடமிருந்து பணத்தை பறிக்கப்போகிறோம் என்பதை அவர் கூறவில்லை. பணமதிப்பிழப்பு நேரத்தில் பணங்களை மாற்ற வரிசையில் நின்றது ஏழை மக்களே.. சூட் பூட் அணிந்த யாராவது பணத்தினை மாற்ற வரிசையில் இருந்தார்களா? தொழிலதிபர்கள் வரிசையில் நின்றார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பணக்காரர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியுள்ளார். ஏழைகளின் பணத்தை பறித்த அவர், பணக்காரர்களுக்கு நன்மை அளித்துள்ளார் என்று அவர் கூறினார்.

Advertisement

முன்னதாக, ஜாமினில் உள்ள ராகுலும், சோனியாவும் எவரது நேர்மை குறித்தும் கேள்வி எழுப்ப தேவையில்லை என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் அவர்கள் ஜாமின் பெற்று உள்ளார்கள் என்பதை மறந்து என்னை நோக்கி எழுப்பி வருகின்றனர் என பிரதமர் மோடி நேற்று கூறியிருந்தார்.


 

Advertisement